1,875 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க முடிவு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 15, 2022

1,875 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க முடிவு

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக 1,875 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு, உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.


தமிழக அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், உதவி பேராசிரியர் பதவியில், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே உள்ள காலியிடங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், மேலும் கூடுதலாக உதவி பேராசிரியர்கள் தேவைப்படுவதால், 1,875 கவுரவ விரிவுரையாளர்களை கூடுதலாக நியமனம் செய்வதற்கான கருத்துரு தயார் செய்ய, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு, உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.


மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் விதிகளின் படி, சரியான கல்வி தகுதி உள்ளவர்கள் மட்டும், புதிய நியமனங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதுதவிர, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே வெளியிடப்படும்.


இதற்கான தேர்வில், கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு நேர்காணலில் சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

2 comments:

  1. பத்து நாட்களில் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு குறித்து அறிவிப்பு வரும் என்றார்கள் என் ஆனது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி