20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் - மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2022

20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் - மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics  ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர், கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் C  பிரிவு பணிகள் 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் Combined Higher Secondary Level (CHSL)  தேர்வு மூலம் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும், இப்பொதுப்பணிகள் தவிர Junior Engineer தேர்வு, Stenographer  தேர்வு, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) and Central Industrial Security Force (CIF) தேர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல்    Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது. இப்பாடப் பிரிவுகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே!


எனவே தமிழ்நாடு மாணவர்கள் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய துறைகள் இணைந்து, இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுநர்களை கொண்டு, ஒரு நாள் கருத்தரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை 09.10.2022 அன்று சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.  

அரசு நடத்தும் இப்பயிற்சி முகாமில் போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துக் கொள்ளலாம். நேரில் வர இயலாத மாணவர்கள் பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சி முழுவதுமாக  இணையதளத்திலும், அரசு கேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி