வங்கிகளுக்கு இந்த மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதம் என்பதால், 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
வங்கிகளுக்கு விடுமுறை என்பது, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தேசிய விடுமுறை தினம் மட்டுமே, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.தமிழகத்தில், இந்த மாதத்தில், 4ல் சரஸ்வதி பூஜை; 5ல் விஜயதசமி; 24ல் தீபாவளி என, மூன்று நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு பொது விடுமுறை. இது தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வழக்கம் போல வங்கிகளுக்கு விடுமுறை.நடப்பு ஆண்டில் அக்., 2ல் ஞாயிறு அன்று வந்ததால் தேசிய விடுமுறை இல்லை. தமிழகத்தில் அக்டோபரில் மொத்தம் 10 நாட்கள் மட்டுமே, வங்கிகளுக்கு விடுமுறை. இதில், பொது விடுமுறை என்பது மூன்று நாட்கள்தான். எனவே, சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி