கவுரவ விரிவுரையாளர்கள் நியமன முறையில் மாற்றம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 13, 2022

கவுரவ விரிவுரையாளர்கள் நியமன முறையில் மாற்றம்

 

''கவுரவ விரிவுரையாளர்கள் நியமன முறையில் மாற்றம் செய்யப்படும்,'' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது.


மாணவ ருக்கு இடங்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கியபின், அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:


பி.எட்., மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, கடந்த ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட 5,303 கவுரவ விரிவுரையாளர்களில், யு.ஜி.சி., தெரிவித்துள்ள கல்வி தகுதியின்படி, 3,393 பேர் மட்டுமே உள்ளனர். வரும் காலத்தில் கவுரவ விரிவுரையாளர்கள், மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர்கள் வழியே, யு.ஜி.சி., விதிப்படி தேர்வு செய்யப்படுவர்.

 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இதுவரை இல்லாத வகையில், 4,000 உதவி பேராசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே ஒரே கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இதற்கான தேர்வில், கவுரவ விரிவுரையாளர்களும் பங்கேற்கலாம். அவர்களுக்கு நேர்காணலில் மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.


அரசு கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, நவ.,1 முதல் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.


தமிழகத்தில் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள், 100 ஏக்கர் நிலம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன், தங்கள் கல்வி நிறுவன பெயரில், 50 கோடி ரூபாய் வைப்பு தொகை செலுத்தினால், அவற்றுக்கு யு.ஜி.சி., விதிகளின்படி, தனியார் பல்கலை அந்தஸ்து வழங்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி