வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை இன்று முதல் அமல்: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2022

வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை இன்று முதல் அமல்: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

 

தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று  போலீஸ் தெரிவித்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் தொடர்பாக அக்.20 தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல்துறை சார்பில் அக்.28 முதல் அமல்படுத்தப்படும் என்று கூறி இருந்த நிலையில் இன்று முதல் அமல் படுத்தப்பட்டது.


புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இருசக்கர, மூன்று சக்கர வாகனத்தில் பயணி குறிப்பிடும் இடத்துக்கு ஏற்றி செல்ல மறுத்தால் ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும்.  போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2வது  முறை ரூ.1500 வரை வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் முதல் முறை ரூ.500, 2ம் முறை ரூ.1500 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் முதல்முறை ரூ.500-ம் 2 வது முறையாக ரூ.1500 அபராதம் வசூலிக்கப்படும். அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். மாக்களை அச்சறுத்தம் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு முதல்முறை ரூ.1000 2வது முறை ரூ.10,000 வசூலிக்கப்படும்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2வது முறையாக ரூ.1500 அபராதம் விதிக்கப்படும். கார்கள், ஜீப்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் ரூ.2000 அபராதம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் அமர்ந்து பயணிப்பவருக்கு அபராதம் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

சாலைகளில் வாகனங்களை பயன்படுத்தி பந்தயங்களில் ஈடுபட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10,000 அபராதம். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் முதல்முறை ரூ.1,000 2-வது முறை ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இனி 46 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராதத் தொகை இன்று முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி