கனமழை: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 27, 2022

கனமழை: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர் மழையின் காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக  தொடர் மழையின் காரணமாகவும்  ஒரு நாள் தூத்துக்குடியில் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் தற்போது மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23ஆம் தேதியுடன் இந்திய பகுதிகளிலிருந்து விலகிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.  இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 45 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது.  

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வத்திராயிருப்பு பகுதியில் 4 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில்  3 செ.மீ., கடம்பூரில், ராஜபாளையத்தில் தலா 2 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிக மழையை பெறும்.  வடகிழக்கு பருவ மழையை தமிழ்நாடு, புதுச்சேரி எதிர்பார்த்து இருக்கின்றன. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி