டெட் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2022

டெட் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 12 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி புனிதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முகாந்திரம்  இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக ஆறு மாதங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி