School Morning Prayer Activities - 20.10.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2022

School Morning Prayer Activities - 20.10.2022

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 20.10.2022

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

பொருள்:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

பழமொழி :
A true friend is the best possession.

உண்மையான நண்பனே உன்னதச் சொத்து


இரண்டொழுக்க பண்புகள் :

1. பள்ளியின் கட்டளைகளுக்கும் அரசு கட்டளைகளுக்கும் கீழ் படிவேன். 

2. அதுவே நானும், நாமும், நாடும் சிறக்க உதவும் என்று அறிவேன்.

பொன்மொழி :

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.

பொது அறிவு :

1. மழை நீரில் உள்ள வைட்டமின் எது ? 

பி12

2. நம் உடம்பின் செயல்கள் அனைத்திற்கும் முக்கியமாக விளங்கும் சுரப்பி எது? 

பிட்யூட்டரி.

English words & meanings :

Immunology - the study of immunity. Noun. Dr. Greg is a specialist in immunology. நோய் எதிர்ப்பியல். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கொத்தவரங்காய கால்சியத்தின் களஞ்சியமாக கருதப்படுகின்றன. வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அவசியம். எனவே, கொத்தரவரங்காய்கள் கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன. இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகின்றன.

NMMS Q :

கீழ்க்கண்ட கரைசல்களில் எது மின்சாரத்தை கடத்தாது? 

a) எலுமிச்சை சாறு b)குழாய் நீர் c)வினிகர் d)தாவர எண்ணெய் 

விளக்கம்: எலுமிச்சைச் சாறு சிட்ரிக் அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமிலமானது நீரில் கரையும் போது நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகளாகப் பிரிகிறது. இந்த அயனிகளின் வழியாக அமிலத்தில் மின்சாரம் கடத்தப்படுகிறது. குழாய் நீரானது அதன் கடினத்தன்மையை பொறுத்து மின்சாரத்தை கடத்தும். வினிகரில் சிறிதளவு அசிட்டிக் அமிலம் உள்ளது. இதில் நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் காணப்படுகின்றன. இந்த மின்னூட்டம் பெற்ற துகள்களின் வாயிலாக மின்சாரத்தை கடத்தும். 

விடை :தாவர எண்ணெய்

அக்டோபர் 20 இன்று

ஆனி சலிவன் அவர்களின் நினைவுநாள்



ஆனி சலிவன் (Anne Sullivan) (1866 ஏப்ரல் 14 - 1936 அக்டோபர் 20 ) இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார்.    கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார். எலனை இவர் சந்தித்த கணத்தில் இருவருக்குமிடையே அற்புதப் பிணைப்பு மலர்ந்தது. 49 ஆண்டு காலம் நீடித்த இந்த மகத்தான உறவில் முதலில் எலனுக்கு இவர் ஆசிரியராகவும், பின்னர் நல்ல துணையாகவும் இறுதியில் நண்பராகவும் மாறினார். கண் பார்வையற்ற, காது கேளாத, பேசும் திறனும் அற்ற குழந்தையான ஹெலனுக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் w-a-t-e-r என்று மீண்டும் மீண்டும் எழுதி மனதில் அறியவைத்தார்.[5] அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது. ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் புடையெழுத்து (பிரைய்லி (Braille) முறையையும் கற்றுக்கொடுத்தார். ஹெலன் ரெட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரை அவருக்கு இவர் உறுதுணையாக நின்றார். எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்காட்லாந்து சலிவனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது. டெம்பிள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்திலுள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்கள் (Harvard University) கவுரவப் பட்டங்களை வழங்கின. இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் 70-வது வயதில் காலமானார்.

நீதிக்கதை

சிட்டுக்குருவியின் கர்வம்

ஒரு கடற்கரையின் அருகில் உள்ள ஒரு செடியில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. முட்டையிடும் பருவம் வந்ததும் பெண் சிட்டுக்குருவி, ஆண் சிட்டுக்குருவியிடம், இந்தக் கூடு பாதுகாப்பானது தானா? என்று கேட்டது. 

இந்தக் கூடு பாதுகாப்பானதுதான் என்றது ஆண் சிட்டுக்குருவி. அருகில் கடல் இருக்கிறதே! அது பொங்கிவந்தால் நம் முட்டைகள் அழிந்துவிடுமே! என்றது பெண் சிட்டுக்குருவி. இந்தக் கடலுக்கு என்னிடம் பகைகொள்ளும் அளவுக்குத் துணிவில்லை என்றது கர்வமாக. 

அதற்கு அறிவுரை கூறும் வகையில் பெண் சிட்டுக்குருவி, உனக்கும் கடலுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதன் வலிமையை உன் வலிமையோடு ஒப்பிடுவது தவறு என்றது. 

இரண்டொரு நாட்களில் கடல் பொங்கி வந்தது. கூட்டிலிருந்த முட்டைகளை அடித்துக்கொண்டு சென்றது. இதனைக் கண்ட பெண் சிட்டுக்குருவி பதறியது. அதற்கு ஆறுதல் கூறிய ஆண் சிட்டுக்குருவி, நீ கவலைப்படாதே! முட்டைகளை நான் மீட்டுக் கொண்டு வருவேன் என்று உறுதியளித்தது. 

ஆண் சிட்டுக்குருவி, பறவைகளின் ராஜாவான கருடனிடம் சென்று முறையிட்டது. கருடராஜா தன் இறைவனான ஸ்ரீ விஷ்ணுவிடம் அறிவித்தார். ஸ்ரீ விஷ்ணு சிட்டுக்குருவியின் முட்டைகளைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு கடலுக்குக் கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைக்குப் பணிந்த கடல், அந்தச் சிட்டுக்குருவியின் முட்டைகளை மீண்டும் அதன் கூட்டில் கொண்டு வந்து வைத்தது. 

நீதி :
எவன் ஒருவன் தன் வலிமையையும், மற்றொருவரின்; வலிமையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறானோ அவன் துன்பப்படுவதில்லை. அவ்வாறு

இன்றைய செய்திகள் - 20.10.22

* பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரைய்லி வடிவ திருக்குறள் உட்பட 45 சங்க இலக்கிய நூல்கள் இலவசம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

* தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

* பள்ளிகளுக்கு ரூ.1,050 கோடியில் 7,200 புதிய வகுப்பறைகள்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* அக்டோபர் 25 ஆம் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்றும் புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* டி20 உலகக்கோப்பை : இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து.

Today's Headlines

*45 Sangha literature books including Thirukkural in Braille format will be given free for the visually impaired: Tamil Nadu government informs High Court.

* An ordinance to ban online gambling games including online rummy in Tamil Nadu was passed in the Legislative Assembly yesterday.

* 7,200 new classrooms for schools at Rs 1,050 crore: CM Stalin's announcement in Assembly.

* The Ministry of Earth Sciences has said that a partial solar eclipse will occur on October 25 and the solar eclipse should not be viewed with the naked eye.

*  Denmark Open Badminton: Kidambi Srikanth advances to 2nd round.

 * T20 World Cup: The practice match between India and New Zealand was canceled due to rain.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி