இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை நவ.7 வரை நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Nov 5, 2022

இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை நவ.7 வரை நீட்டிப்பு

 

மத்திய அரசு பல்கலைக்கழக்கழகமான இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக்கல்வி திட்டம் வாயிலாக பல்வேறு சான்றிதழ், டிப்ளமா, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. ஜூலை 2022 பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 31-ம்தேதி முடிவடைந்தது. 


இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடைசி தேதியை நவம்பர் 7 வரை நீட்டித்துள்ளது. எனவே, தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நவம்பர் 7-ம் தேதி வரை ஆன்லைனில் (https://ignouadmission.samarth.edu.in) விண்ணப்பிக்கலாம். எனினும் இந்த காலநீட்டிப்பு சான்றிதழ் மற்றும் செமஸ்டர் சார்ந்த படிப்புகளுக்கு பொருந்தாது, என இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி