சரியான பதிலுக்கு தவறு என மதிப்பீடு கூடுதலாக ஒரு மதிப்பெண் தந்து ஆசிரியர் பணி வழங்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2022

சரியான பதிலுக்கு தவறு என மதிப்பீடு கூடுதலாக ஒரு மதிப்பெண் தந்து ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

 சரியான பதிலுக்கு தவறு என மதிப்பிட்டதால் கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணி வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வினோபிரதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர்  தேர்வில்   150க்கு 97.77 மதிப்பெண் பெற்றேன். பிசி பெண்கள் பிரிவில் கட்-ஆப் மதிப்பெண் 98.196 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால், என்னை தேர்வு செய்யவில்லை. 71 மற்றும் 108வது வினாக்களுக்கு சரியான விடையளித்திருந்தேன். ஆனால், தவறான விடை என கணக்கிட்டுள்ளனர்.  எனக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் இரு கேள்விக்கும் சரியான பதிலளித்துள்ளார். ஆட்சேபம் காரணமாக 71வது கேள்வி நீக்கப்பட்டுள்ளது. 108வது கேள்விக்கு மனுதாரர் சரியாக பதில் அளித்துள்ளார். ஆனால் கீ ஆன்சரில் வேறு பதில் இருப்பதால், மனுதாரருக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை.  இந்தியாவின் பிரதமர் யார்? என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என பதில் அளித்தால், விடை ராகுல்காந்தி என உள்ளதாக கூறுவது அபத்தம். எனவே, மனுதாரருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி, அவர் 150க்கு 98.77 மதிப்பெண் பெற்றதாக கருதி தாமதம் இல்லாமல் அவருக்கு ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

6 comments:

  1. Pls share the advocate's number who filed the case....I too have the same problem. Contact No. 6380202902

    ReplyDelete
  2. Vinopratha madam ku modi pm na enakaluku mattum ragul gandhi prime minister a.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி