மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஹெச்.எம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Nov 19, 2022

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஹெச்.எம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பஞ்சாயத்து மேலக்கடலாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 128 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தலைமையாசிரியையான சற்பிரசாதமேரி தனது சொந்த பணத்திலிருந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினார். இந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.


தலைமையாசிரியை சற்பிரசாதமேரி பேசுகையில் ‘‘பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒரு நாளில் இரண்டு முறை பராமரிக்கப்படும் கழிவறை, சத்துணவு மற்றும் அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடலாடி, மேலக்கடலாடி மற்றும் அருகிலுள்ள கே.கரிசல்குளம், இந்திரா நகர், தேவர் நகர் உள்ளிட்ட கிராம மக்கள், வரும் கல்வியாண்டில் எங்கள் பள்ளியில் அதிகளவு மாணவர்களை சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் வழங்கப்பட்டது’’ என்றார். அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி