நாட்டில் முதன் முறையாக கர்நாடகாவில் தொடக்க பள்ளிகளில், புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2022

நாட்டில் முதன் முறையாக கர்நாடகாவில் தொடக்க பள்ளிகளில், புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம்!

 

நாட்டில் முதன் முறையாக கர்நாடகாவில் டிசம்பர் 23ம் தேதி, அங்கன்வாடி மையங்கள், தொடக்க பள்ளிகளில், புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்பட உள்ளது.


மத்திய பா.ஜ., அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை 2020ல் கொண்டு வந்தது. இதுவரை எந்த மாநிலத்திலும் அறிமுகப்படுத்தவில்லை.


கடந்தாண்டே கர்நாடகாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மாநில பா.ஜ., அரசு அறிவித்தது. இதற்காக ஆசிரியர்கள், கல்வி வல்லுனர்கள், உயர் அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.


இதற்கிடையில், பெங்களூரில் ஆரம்பகல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் நாகேஷ் நேற்று கூறியதாவது:


நாட்டில் முதல் முறையாக கர்நாடகாவில் தான் புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இதற்குரிய புதிய பாடப்புத்தகங்கள் வர உள்ளது. 1, 2 ம் வகுப்புகளுக்கு தலா இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கும்.


மாநிலத்தின் 20 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள்; 6,000 தொடக்க பள்ளிகளில் டிசம்பர் 25ம் தேதி தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்படுகிறது.


கல்வி கொள்கை குறித்து, 'சலிபிலி,' 'நலிகலி' என்றகல்வி திட்டங்கள் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி