ஆசிரியரை பதட்டமாக வைப்பது தான் ‘ அரசின் நோக்கமா??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2022

ஆசிரியரை பதட்டமாக வைப்பது தான் ‘ அரசின் நோக்கமா???

 

''பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒருவித பதட்டத்துடன் பணியாற்ற வேண்டும் என நினைப்பது தான் 'திராவிட மாடல்' அரசின் நோக்கமா ,'' என, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.முத்துப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவர் கூறியதாவது:


அடிப்படை வசதி இல்லாத கிராம பள்ளிகளில் ஆன்லைனில் புள்ளிவிபரம் கேட்பது வாடிக்கை ஆகிவிட்டது. 2019 ல் ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து அ.தி.மு.க., அரசின் தவறான நடவடிக்கை ஆசிரியர், அரசு ஊழியர்களை வீறு கொண்டு எழ செய்தது. அப்போது இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் அளித்தார்.


ஆனால் இன்றைய நிலை ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருப்பது கல்வித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


குழு அமைத்து பள்ளிகளை ஆய்வு செய்வதில் ஆசிரியர்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவை அச்சப்படும் அளவிற்கு செயல்படுத்துவதை ஏற்க முடியாது. ஆய்வுகள் ஆலோசனை வழங்கும் ஆக்கப்பூர்வ பணியாக இல்லாமல் ரகசியம் கடைபிடிக்கப்படுகிறது.


பள்ளியில் ஆசிரியர்கள் ஒருவித பதட்டத்துடன் பணியாற்ற வேண்டும் என நினைப்பது தான் ' திராவிட மாடல்' அரசின் நோக்கமா என தெளிவுபடுத்தவேண்டும். ஆண்டுதோறும் அடிப்படை வசதி, புதிதாக கட்ட வேண்டிய, அகற்ற வேண்டிய கட்டடம் குறித்து கேள்விகள் தான் கேட்கிறார்கள். ஆனால் தீர்வு இல்லை. பாடபுத்தகம், பயன்படாத பதிவேடுகள் மட்டுமே கல்வி என நினைப்பது அதிகாரிகள் எண்ண ஓட்டம்.


ஆனால் மாணவர்களுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்து அவர்களை நல்லவர்களாக வார்த்தெடுப்பது ஆசிரியரின் கனவு. இதனால் ஆய்வுகளை கண்டு குழப்பம் அடையாமல் தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறோம், என்றார்.

2 comments:

  1. பதட்டமாக வைத்திருக்கும் கலை இதுதான்.அரசை வேறு கேள்விகள் கேட்காமல் இருப்பதற்காக.

    ReplyDelete
  2. ஆம்,
    ஆசிரியர் தங்களின் வழக்கமான கற்பித்தல் பணியை செய்யவிடாமல் இடையூறு செய்து அரசு பள்ளிகளை சீரழித்து, அவற்றின் தரத்தை குறைப்பதற்கான ஒரு method dhaan இந்த Team visit கூத்துகள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி