SMC - அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2022

SMC - அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு....

 அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:


❇️ அனுப்பப்பட்டுள்ள மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையின் படி,  மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.11.2022 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4:30 வரை நடத்தப்பட வேண்டும்.


❇️ உறுப்பினர்களின் வருகையை அன்றைய தினமே  TNSED parents appல் , SMC தலைவர் மட்டுமே , ID & PASSWORDஐ பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். ( ID: TEN DIGIT MOBILE NUMBER, 

Password: Smc@LAST FOUR DIGIT OF MOBILE NUMBER)


🔺TNSED parents appல் மட்டுமே வருகையை பதிவு செய்ய வேண்டும். 25. 11. 2022 அன்று மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே , அன்றே உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ததாக EMISல் பதிவாகும். 


🔺 உறுப்பினர்களின் வருகையை வேறு Appல் பதிவு செய்து விட்டோம், Network problem, எங்களுக்கு App open  ஆகவில்லை, ஆகிய காரணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


❇️அனைத்து உறுப்பினர்களின் வருகையை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.  நமது மாவட்டத்தில்  உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் TNSED parents appல் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும். (100 சதவீத பள்ளிகள் வருகையை பதிவு  செய்திருக்க வேண்டும்) .     


❇️ உறுப்பினர்கள்,  பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து , அதை செயலியில் (TNSED parents appல்) பதிவேற்றம் செய்வதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.


❇️ பள்ளி மேம்பாட்டுத்திட்டத்திற்கான உட்கூறுகள்:  

1.இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள்

2.இல்லம் தேடி கல்வி, ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

3.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை

4. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி

5. கலை மற்றும் கலாச்சாரம், கலை அரங்கம் மற்றும் கலைத் திருவிழா.

6. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல்

7. பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையில் கட்டிடங்கள்

8. போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாவலர் வசதி

 ( மேலே கூறப்பட்டுள்ளவைகளுக்கு தெளிவான விளக்கங்கள் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறையில் உள்ளது. அனைத்தையும் முறையாக பின்பற்றி மாதாந்திர பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது) 


🎯மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை பார்வையிட  மாநில திட்ட இயக்குநர் அவர்களால் பார்வையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி