12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2022

12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு...

அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் பாடங்களை 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் 10ஆண்டுக்கு மேலாக கற்று கொடுக்கின்றனர்.


அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:

திமுக ஆட்சிக்கு வந்தால், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆட்சி அமைந்து 19 மாதங்கள் ஆகிவிட்டது.

பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

பொங்கல் போனஸ், அட்வான்ஸ் இந்த ஆண்டாவது வழங்க வேண்டும்.

அமைச்சரவையில் முதல்வரின் முடிவை எதிர்நோக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

--------------------------------------
எஸ்.செந்தில்குமார்
செல் : 9487257203
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

5 comments:

  1. தமிழ் நாட்டின் மோடிஜி - ஸ்டாலின்...
    இந்தியாவின் ஸ்டாலின் - மோடிஜி... யோசிச்சு பாருங்க புரியும் 😄😄😄

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.(90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்- திராவிட மாடல்)

    ReplyDelete
  3. "இறைவன்" முதல்வர் மனதை என்றைக்கு உருத்த செய்ய போகிறார்களோ.விதி என்பது ஒன்றும் இல்லை இது மனிதர்கள் செய்கின்ற சூழ்ச்சி.

    ReplyDelete
  4. அதிபயங்கர விபத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சிக்க வேண்டும்... அப்போது தான் சாதாரண மக்களின் வலி புரியும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி