நியமனத்தேர்வு கட்டாயம் - (மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்து அமைச்சர் ஆகலாம்) அரசாணை 149 ரத்து இல்லை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2022

நியமனத்தேர்வு கட்டாயம் - (மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்து அமைச்சர் ஆகலாம்) அரசாணை 149 ரத்து இல்லை!!

 

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் நடத்தப்படும் தேர்வின் மூலமே அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்காக அர சாணை 149 கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் ஆசிரி யர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசு, இந்த அரசாணையை ரத்து செய்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் என்றும் ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

ஆனால் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படியே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்ததாக இடை நிலை, பட்டதாரி பணியிடங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் அறிவிக்கப்பட் டுள்ளது.

4 comments:

  1. காமராஜர் கூட படிக்கல அப்ப நீங்க என்ன சொல்லவரீங்க

    ReplyDelete
  2. ஏமாற்றிய திமுக ஸ்டாலின் அரசு பல ஆயிரம் ஆசிரியர்கள் வாழ்க்கை கேள்வி குறி!!!! ஸ்டாலின் தா வராரு விடியல் தர போராறு

    ReplyDelete
  3. tet ஒரே குழப்பம் தான்.Tet2013 ஒரே notification.ஆனால் ஒரு பிரிவினர் weitage முறையில் நியமனம்,மற்றாெ ரு பிரிவினருக்கு தேர்வா? வெயிட்டேஐ் முறை யால் பாதிக்கபட்டவர்களுக்கு என்ன தீர்வு

    ReplyDelete
  4. engappa entha, kalathula erangi poradaravanga, aalaye kanom. arasuku alutham kuduthu alutham kuduthu engalai kilavanaakinathu than micham. elangova, and vadiveluuuuu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி