அண்ணா பல்கலை.யில் தமிழாசிரியா் பணி: டிச.20-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 15, 2022

அண்ணா பல்கலை.யில் தமிழாசிரியா் பணி: டிச.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

 

அண்ணா பல்கலை., அதன் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக தமிழாசிரியா் பணியிடங்களுக்கு டிச.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலை.யில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு சிறந்த கல்விப் பின்னணி மற்றும் கற்பித்தல் திறன் கொண்ட கல்வித் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.


பல்கலை. துறைகளில் 6 பணியிடங்களும், உறுப்புக் கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ளன. பி.ஏ., எம்.ஏ. ஆகியவற்றில் தமிழில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு இணையான கிரேடு அவசியம். ஸ்லெட், நெட், செட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்காலிக ஆசிரியா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.


பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்விச் சான்றிதழ் நகல்களுடன் நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து பிடிஎஃப் வடிவில் மின்னஞ்சல் மூலமாகவோ dirtamildvt@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரியிலோ டிச.20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.


அசல் விண்ணப்பம், இணைக்கப்பட்ட சான்றிதழ்களை ‘முனைவா் பா.உமா மகேஸ்வரி, இயக்குநா், பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம் (CPDE Building), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025, தொலைபேசி எண்- 044-22358592, 22358593’ என்ற முகவரியில் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி