தேர்தல் அறிக்கை 311 என்ன ஆச்சு? டிபிஐ வளாகத்தில் குவியும் இடைநிலை ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2022

தேர்தல் அறிக்கை 311 என்ன ஆச்சு? டிபிஐ வளாகத்தில் குவியும் இடைநிலை ஆசிரியர்கள்!



சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்திய போது வசனம் பேசியவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கை 311 ல் கூறியபடி சமவேலைக்கு சம ஊதியம் என்பதை மறந்து விட்டனர்.  

தங்களது ஒரே கோரிக்கையான சமவேலைக்கு சம ஊதியம்
நிறைவேற்ற வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள்
சென்னை டிபிஐ வளாகத்தில் குவிந்து வருகின்றனர்.

மாணவர்கள் கல்வி பாதிக்க கூடாது என்பதால் ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கல்வி அமைச்சர் நேரில் சந்தித்து தீர்வு காண வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

5 comments:

  1. உண்மையில் இந்த இடை நிலை ஆசிரியர்களின் நிலை பரிதபதிர்க்கு உரியது.....வேலை பளு அதிகம்......சம்பளம் மற்ற அசிரியர்கை விட மிகக்குறைந்த அளவு....நியாயமான கோரிக்கை vellattum

    ReplyDelete
  2. திராவிட மாடல் பொய் வாக்குறுதி அளித்து ஆட்சி க்கு வந்து எந்த ஒரு வாக்குறுதியை யும் நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது அதற்கு நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட படும்

    ReplyDelete
  3. இடைநிலை ஆசிரியர்களின் சம ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி

    10.03.2020 க்கு பிறகு உயர்கல்வி முடித்தவர்களுக்கும் ஊக்க ஊதியம் அளிப்பதாக உறுதி (10.03.2020க்குள் முடித்தவர்களே இன்னும் ஊக்கஊதியம் அளிக்கவில்லை)

    பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது
    இப்படி பல வாக்குறுதிகளை அளித்து....குடும்பம் குடும்பமாக ஓட்டுப்போட வைத்து இப்போது மௌனம் சாதிக்கும் திடாவிட மாடல்.....

    நாங்கள் சென்று கேட்கவில்லை....
    வெட்கமில்லாமல் நீங்களே நாங்கள் போராடும் இடத்திற்கே வந்து வாக்குறுதி அளித்தீர்கள்....

    மனசாட்சியோடு செயல்படுங்கள்



    ReplyDelete
  4. வாயில வடை சுட்டத நம்பி ஓட்டு போட்டீங்க

    ReplyDelete
  5. நாம் ஏமார தயாராக இருந்தோம். திமுக அதற்கு வாய்ப்பு கொடுத்தது. அவ்வளவுதான்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி