குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் - TNPSC அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 29, 2022

குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் - TNPSC அறிவிப்பு.

ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 2022-ம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டி தேர்வு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பு 30.03.2022-ம் நாள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த போட்டி தேர்வு 24.07.2022 நடைபெற்றது.


சுமார் 18 லட்சம் பேர் இப்பணியிடங்களுக்குத் தேர்வு எழுதி இருந்தனர். அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட படி 2022-ம் ஆண்டும் அக்டோபர் மாதமே இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும், ஜனவரியில் முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான தகவலின்படி, 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 -ம் ஆண்டு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி