அடுத்த ஆண்டு குரூப் 4 தோ்வு எப்போது? திட்ட அறிக்கையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 16, 2022

அடுத்த ஆண்டு குரூப் 4 தோ்வு எப்போது? திட்ட அறிக்கையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தோ்வு உள்பட அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது.


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டுத் திட்ட அறிக்கை விவரம்: மீன்வளத் துறை சாா்-ஆய்வாளா் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.


எழுத்துத் தோ்வு வரும் ஜன. 29-இல் நடக்கிறது. மக்கள் நல்வாழ்வுத் துறையில் சுகாதார அலுவலா் பதவிக்கான காலியிடங்களை நிரப்ப ஏற்கெனவே தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப். 13-இல் எழுத்துத் தோ்வு நடத்தப்படவுள்ளது.


குரூப் 2 தோ்வு: குரூப் 2 தோ்வுக்கான முதல்நிலைத் தோ்வு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப். 25-இல் முதன்மைத் தோ்வு நடத்தப்படவுள்ளது.


மாவட்ட கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை இந்த மாதம் வெளியிடப்பட்டு, எழுத்துத் தோ்வு அடுத்த ஆண்டு ஏப். 9-இல் நடத்தப்படும்.


அதிக காலிப் பணியிடங்களைக் கொண்டு நடத்தப்படும் குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை அடுத்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டு 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும்.


ஒருங்கிணைந்த பொறியாளா் பணிகளுக்கான காலியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பரில் தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, டிசம்பரில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும் என்று ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி