சொன்னதை செய்யவே - தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறலே - ஜன. 5 ல் ஆர்ப்பாட்டம் : ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2022

சொன்னதை செய்யவே - தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறலே - ஜன. 5 ல் ஆர்ப்பாட்டம் : ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ், தமிழகத்தில் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலை படித்தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியும் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு துறைகளில் அவுட்சோர்ஸ் முறையில் பணி நியமனத்திற்காண அரசாணையை ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2023 ஜனவரி 5 ஆம் தேதி மாவட்ட தமிழக முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.



தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து 20 மாதங்கள் ஆகியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன் வராத பட்சத்தில் 2023 ஜனவரி 8 ஆம் தேதி மதுரையில் ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம் கூடி அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த ஆர்ப்பாட்டத்தை தீவிர படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 



முன்னதாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலகத்தில்ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்

3 comments:

  1. அரசியல் வியாதிகள் கோடி கோடியாக சொத்து சேர்த்துக்கொள்ள பணம் உள்ளது. ஆனால் படித்தவர்களுக்கு வேலை போட்டால் பணம் இருக்காது. எல்லா வேலைகளையும் அவுட் சோர்சிங் என்றால் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள். அரசியல் விளையாட்டுகள் கோடிகளில் புரள்வார்கள். முந்தைய ஆட்சியில் நடந்த அக்கிரமங்கள் தொடரக்கூடாது.

    ReplyDelete
  2. விளையாட்டுகள் அல்ல. வியாதிகள். மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. எப்படியும் முதல்வர் ஜனவரி 26 2023 ல் அகவிலைப்படியை அறிவிப்பார்.அடுத்து என்ன (2023 ஜனவரி to ஜு ன் அகவிலைப்படி ) கோவிந்தா கோவிந்தா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி