அரசு பள்ளிகளை மேம்படுத்த 'நம்ம ஸ்கூல்'திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2022

அரசு பள்ளிகளை மேம்படுத்த 'நம்ம ஸ்கூல்'திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

 

அரசு பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் என்னும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், நம்ம ஸ்கூல் என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.


இத்திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக இத்திட்டம் தொடங்கப்படுவதோடு, இதற்கான இணையதளத்தையும் முமுதலமைச்சர் நாளை அறிமுகம் செய்கிறார்.

இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. ஏற்கனவே இருந்த திட்டத்திற்கு புதிய பெயர் வைப்பது ஒரு புதிய சகாப்தம். அடுத்ததாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு 35 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் அரசு பள்ளி உட்கட்டமைப்பு வசதி சுற்றுச்சுவர் வண்ணம் பூசுதல் இணையதள வசதி நாற்காலி மேஜை போன்ற மர சாமான்கள் வாங்குவதற்கான பணத்திற்கு மீண்டும் மக்களிடமே கையேந்துவது எதற்கு..? அப்பொழுது 35 கோடி என்னவாயிற்று ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு பணம் எங்கே போகிறது..?

    ReplyDelete
  2. இன்னும் என்ன என்ன திட்டத்தின் பெயரில் கொள்ளை அடிக்கலாம் என்று யோசியுங்கள்.... ஆசிரியர் நியமனத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாதீர்கள்...

    ReplyDelete
  3. ரெண்டு வருஷத்துல 15லட்சம் பேர் கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்ந்து இருக்காங்கனு பேட்டி கொடுத்த ஸ்டாலின்... போஸ்டிங் போடறதுல ஆர்வம் காட்டல 😄😄😄 நியமன தேர்வு வேணாம்னு சொன்ன எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினை காணோம் இப்போ 😄😄😄

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி