வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு தெற்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது: வானிலை மையம் தகவல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 13, 2022

வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு தெற்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது: வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி இருந்தது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரமாக உள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வருகிற 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு தெற்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்து 3 நாட்களில் வலுவிழக்கும் எனவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி