அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - அசைன்மென்ட்களை வழங்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 23, 2022

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - அசைன்மென்ட்களை வழங்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு  அசைன்மென்ட்களை வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


பள்ளிகளில் கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. காலை மாலை என இரு நேரங்களிலும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.  அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15 முதல் 24 டிசம்பர் 2022 வரை நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை தேர்வுகள் நடைபெறுகிறது.   

இந்திலையில் நாளை தேர்வு முடியும் நாள் என்பதால் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்துள்ளனர். டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு எந்த வித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,11,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அசைன்மென்ட் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

3 comments:

 1. மழை லீவு ன்னா லீவுதான் ஆனால்
  இதற்கு மட்டும் அரசு ஆணை பள்ளிக்கு அனுப்னுமாம்

  ReplyDelete
 2. This news may be sent to Thoothukudi district CEO.

  ReplyDelete
 3. How to complaint if the school was continuously running with out holiday

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி