ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு தேவை; ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 26, 2022

ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு தேவை; ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

 

ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனையால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் 1000 பேரின் வாழ்வாதாரம் காக்க டெட்' தேர்வில் இருந்து விலக்குஅளிக்க வேண்டும், என தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செய்தி தொடர்பாளர் கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:


அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணி நியமனம் பெற்ற 1000 ஆசிரியர்கள் மட்டும் 10 ஆண்டுகளாக தகுதி தேர்வு (டெட்) நிபந்தனையால் பாதிக்கப்பட்டுஉள்ளோம். அதே நேரம் 2012ம் ஆண்டு நவ.,16ல் தகுதி தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்விதுறை (பணியாளர்) இணை இயக்குனர் உத்தரவால் காப்பாற்றப்பட்டனர்.


அதே போன்று அரசு உதவி பெறும் சிறுபான்மைபள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்க பயிற்சி மட்டும் அளிப்பதாக கூறி அவர்களையும் அரசு காப்பாற்றியது. ஆனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி அளித்து பாதுகாப்பதாக கடந்த ஆட்சியில் கல்வி அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்காலிகமாக எங்கள் பணியை பாதுகாக்கிறோம்.


ஆசிரியர் தகுதி தேர்வை காரணம்காட்டி இது வரை எங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவி, சம்பள உயர்வு, ஈட்டிய விடுப்பு, பணிப்பதிவேடு துவக்குதல், விடுப்பு அனுமதிப்பு, தகுதிகாண் பருவம் நிறைவேற்றல், பணி வரன்முறை செய்தல் போன்ற எண்ணற்ற நடைமுறைகளை அரசு அனுமதிக்க மறுக்கிறது. தமிழக அரசு, தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், என்றார்.

3 comments:

  1. 82 மார்க் எடுத்து பாஸ் பண்ண முடியலன்னா எதுக்கு டீச்சரா இருக்கணும்

    விலக்கு அளித்தாள் இதை விட சமூகநீதி வேறு எதுவும் இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி