அனைத்து வகை அரசு / அரசு உதவி / பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து ( EMIS ) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMIS - இல் 16.12.2022 - க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
இனி வருங்காலங்களில் முதன்மை கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த நலத்திட்டங்களுக்கான தேவைப்பட்டியலாக ( Indent ) எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி