PG TRB -2022 ல் தமிழ் வழியில் தகுதி பெற்று புறக்கணிக்கப்பட்ட தேர்வர்களின் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2022

PG TRB -2022 ல் தமிழ் வழியில் தகுதி பெற்று புறக்கணிக்கப்பட்ட தேர்வர்களின் கோரிக்கை

கடந்த 2021-22ல் நடந்த PG TRB ல் 16.9.2022 அன்று வெளியிடப்பட்ட தெரிவு பட்டியலில் தகுதி பெற்று இருந்தும்16.9.2022 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் Maths, Economics, commerce, computer science பாடப்பிரிவுகளில் இருந்து குறிப்பாக தமிழ் வழியில் படித்த 56 தேர்வர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன இதை அறிந்த தேர்வர்கள் TRB யிடம் கேட்டப்பொழுது சரியான தகவல் அளிக்கப்படவில்லை. பின்பு தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் இவர்களுக்கு நான்கு வாரத்திற்குள் councling வைத்து நியமன ஆணை வழங்குமாறு பள்ளி கல்வி துறைக்கும் ,TRB க்கும் உத்தரவிடபட்டன. 


நான்கு வாரத்திற்கு மேல் ஆகியும் பள்ளி கல்வி துறை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் கடந்த தி.மு.க ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமையை பின்பற்றாமல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புறக்கணிக்கப்பட்ட 56 தேர்வர்கள் சென் னை உயர்நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

1 comment:

  1. அமுதசுரபி பயிற்சி மையம், தருமபுரி
    PG TRB-தமிழ் & கல்வியியல் (Education)
    நேரடி வகுப்புகள் தொடக்கம் - மே மாதம் 2023,
    Study materials available
    Contact: 9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி