முக்கிய நிகழ்வுகள் - ஜனவரி 28 - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 28, 2023

முக்கிய நிகழ்வுகள் - ஜனவரி 28

* 1882 – ம் ஆண்டு ஜனவரி 28 ம் தேதி  சென்னையில் முதன் முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.


* லாலா லஜபதி ராய் எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு.

லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர்.

‘லாலா லஜபத் ராய்’ பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் லட்சுமி காப்புறுதி கம்பெனி ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தார். முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என்று முழங்கினார்.

பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்தது. 6 மாதங்களில் விடுதலையானார்.காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி கைவிட்டதால், சுயராஜ்ஜியக் கட்சியில் சேர்ந்தார்.

1928-ல் லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இவர் பிறந்த தினம் ஜனவரி 28, 1865. 


* முத்துச்சாமி அய்யர், பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உச்சுவாடி எனும் கிராமத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் தந்தையை இழந்த முச்துச்சாமியை, முத்துச்சாமி நாயக்கர் எனும் தாசில்தார், சென்னையில் தங்கி படிக்க உதவி செய்தார். பள்ளிப்படிப்பு முடித்த முத்துச்சாமி அய்யர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்து, பின்னர் சட்டம் பயின்றார். இவர் 1893-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார். இவர் பிறந்த தினம் ஜனவரி 28, ஆண்டு 1832. 


* சரோஜா ராமாமிருதம் என்கிற பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிறந்த தினம் 28 ஜனவரி 1931.


* இரண்டாம் பாஜி ராவ்  மராத்திய பேரரசின் இறுதி பேஷ்வாக 1796 முதல் 1818 முடிய ஆட்சி செலுத்தியவர். 1817–1818இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், மராத்திய ஆட்சிப் பகுதிகளை பிரிட்டனின் கம்பெனி ஆட்சியிடம் இழந்தவர். இவர் மறைந்த தினம் 28 ஜனவரி 1851.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி