அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2023

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து , இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது . இதன்படி , தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும் . இதனால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள் , ஆசிரியர்கள் , ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் . இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுமெனினும் , அரசு அலுவலர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச் சுமையை அரசு ஏற்றுள்ளது.

16 comments:

 1. ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி யில் வேட்டு வைக்கும் திராவிட மாடல் அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட படும்

  ReplyDelete
  Replies
  1. வேற யாருக்கு போட சொல்றிங்க

   Delete
  2. தேர்தலை புறக்கணிப்போம்

   Delete
  3. இதுவல்ல சரியான தேர்வு

   Delete
  4. Select BJP Because see central government employees

   Delete
  5. திமுக மற்றும் அதிமுக இத தவிர்த்து வேற எதை வேண்டுமானாலும் தேர்வு பண்ணுங்க

   Delete
  6. கணிசமான ஆசிரியர்கள் முழுக்க,முழுக்க சுயநலமாக செயல்படுவதாலும்,பொருளாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி மட்டுமே போராடுவதாலும் தான் இன்று நாம் மக்கள் மத்தியில் அந்நியப்பட்டு நிற்கின்றோம்...கடந்த கால தவறுகளிலிருந்து இன்னமும் நாம் நம்மை சுயபரிசோதனை செய்யாமலேயே இருப்பது வேதனையே..பொதுநலன் கொண்டும்,தமிழக நலன் கொண்டும்,பொதுமக்கள் பார்வையிலும் இனியாவது சிந்திப்போம்..

   Delete
 2. நீங்களா அவங்க எப்படி பண்ணாலும் நீங்க அவங்களுக்கு தான் ஓட்டு போடுவீங்க

  ReplyDelete
 3. சாதாரணமாக வருடத்திற்கு இருமுறை நடக்கும் அகவிலைப்படி உயர்வினை....சுதந்திர தினத்தன்றும் ...புத்தாண்டு அன்றும் அறிவித்து ஏதோ பரிசளிப்பது போன்ற மாயபிம்பத்தை இந்த அரசு ஏற்படுத்துகிறது.....இதன் மூலம் 2359 கோடி கூடுதல் செலவினம் என பொதுமக்களை அரசு ஊழியர்களுக்கு திருப்பும் வேலையையும் செய்கிறது ..இந்த போலி ஒப்பனை அரசு

  ReplyDelete
 4. பகுதி நேர ஆசிரியர்களை "பணி நிரந்தரம்" செய்யபடும் சொன்ன உங்க தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சி

  ReplyDelete
 5. பகுதி நேர ஆசிரியர்களுக்கு எப்பொழுது விடியல் கிடைக்கும்?

  ReplyDelete
 6. ஜாக்டோ ஜியோ என்ன செய்கிறார்கள் ஒவ்வொரு முறையும் நாம் 6 மாத நிலுவை இழந்தால் எப்படி

  ReplyDelete
 7. சரண்டர் விடுப்பு என்ன ஆனது

  ReplyDelete
 8. Special teachers pstm Post ennachu

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி