ADW பள்ளிகளில் காலியாக உள்ள PG,BT,SGT ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2023

ADW பள்ளிகளில் காலியாக உள்ள PG,BT,SGT ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப உத்தரவு.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு  ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் . பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என கருதப்படுவதால் , மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும் , காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரந்திர பணியாளர்கள் நிரப்பிடும் வரை மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டியுள்ள நிலையில் , பார்வையில் காணும் அரசாணையில் தற்காலிகமாக காலிபணிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப்பெற்றுள்ளது.


மேற்படி அரசாணையில் , பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் , தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 19 - இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து , ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக உள்ள 19 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , 80 பட்டதாரி ஆசிரியர்கள் , 366 இடைநிலை ஆசிரியர்களை ( இணைப்பில் தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும் ) பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 7500 / - , பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ .10,000 / - மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ .12,000 / - மாதத் தொகுப்பூதியத்தில் கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.

பணி நியமனத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ADW Schools SMC Teachers Appointment Instructions.pdf - Download here

2 comments:

  1. டேய் எல்லாமே தற்காலிகப் பணியிடம் என்று சொல்கிறீர்கலே டேய் உன்னுடைய முதல்வர் பணி தற்காலிகப் பணி என்று சொன்னால் உனக்கு எப்படி இருக்கும் அறிவு இல்லாத அரசன் முட்டாள் அமைச்சர்கள் இதை கேட்க தைரியம் இல்லா எதிர்க் கட்சித் தலைவர்

    ReplyDelete
  2. டெட் paper 2 ஆன்லைன் வகுப்பு தமிழ் மற்றும் சமூகவியல் மாலை நேரத்தில் நடத்தப் படும். வினாத்தாள் வகுப்பு முடித்தவுடன் அடுத்த நாள் வினாத்தாள் கொடுக்கப் படும் 2 மணி நேரம் வகுப்பு நடத்தப் படும் 7868903430

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி