எம்.ஆர்க்., படிப்புடன் பிஎச்.டி., இனி கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2023

எம்.ஆர்க்., படிப்புடன் பிஎச்.டி., இனி கட்டாயம்

கட்டடவியல் கல்லுாரிகளில் ஆசிரியர் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு இனி எம்.ஆர்க். படிப்புடன் பிஎச்.டி. கட்டாயம் என 'கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்' அமைப்பு தெரிவித்துள்ளது.


பழைய விதிமுறைகளின் படி இளநிலை படித்து குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் முதுநிலை படிக்காமலேயே பிஎச்.டி. படிப்பில் சேர்ந்துக் கொள்ள இயலும். அதன்படி பிஎச்.டி. முடித்த பலர் கல்லுாரிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில் 2020 கட்டடவியல் படிப்புக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி விதிமுறைகளின்படி இனி பணி நியமனம் பதவி உயர்வுக்கு கட்டாயம் முதுநிலையுடன் கூடிய பிஎச்.டி. அவசியம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


இதில் 2020 அக். 31 நிலவரப்படி பிஎச்.டி. முடித்தவர்கள் சேர்க்கை புரிந்தவர்கள் இளநிலையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருப்பின் ஆசிரியர் பணிநியமனம் செய்யலாம். அவர்களுக்கு மட்டும் விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து கல்லுாரிகளுக்கும் வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி