ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 4, 2023

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

 முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் உடனே வழங்க வேண்டும்.


 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.


 தொகுப்பூதியத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர் எம்ஆர்பி செவிலியர் வருவாய் கிராம உதவியாளர் ஊர்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும்.


 காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.


 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை 05.01. 2023 அன்று மாலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ  கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


 அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று 03.01.2023 சிந்து பூந்துறை கல்லூரி பேராசிரியர் சங்க அலுவலக கட்டடத்தில் ( MUTA ) வைத்து நடைபெற்றது.

ஆலோசனைக்கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளருமான  நல்லாசிரியர் இராஜேந்திரன் அவர்களும், ஆசிரியர் மன்றத்தின் திருநெல் வேலி மாவட்ட பொறுப்பாளர் இராஜகுமார் அவர்களும் உரையாற்றிய நிகழ்வு.

1 comment:

  1. காலை வணக்கம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பற்றி கொஞ்சம் பேசுங்க.பெண்களில் சில பேர் வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் இருக்கிறோம்.முதல்வர் கூறிய தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது."தெய்வங்கள்" இன்னும் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி