இன்று கடைசி: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்காவிடில் என்னவாகும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2023

இன்று கடைசி: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்காவிடில் என்னவாகும்?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக, சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றம் எதிர்பார்க்கப்படுகிறது.


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் அளித்த கால அவகாசம் இன்றுடன் (ஜன.31) நிறைவடைகிறது. இதுவரை இணைக்காதவா்கள் விரைந்து இணைக்க வேண்டுமென மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்திருந்தார்.


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கிய அவகாசம், செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி, 2.34 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


இதுவரை மொத்தமாக 87.44 சதவீத மின் நுகா்வோா்கள், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாகவும், இதுவரை இணைக்காவதவா்கள், விரைந்து இணைக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டரில் அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்திருந்தார்.


10 சதவீதத்துக்கும் அதிகமானோா் இன்னும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியிருப்பதால், கால அவகாசம் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


மேலும், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றோ அல்லது நாளையோ தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி