நீட் தேர்வு குறித்த விளக்கம் அனுப்புகிறது தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 23, 2023

நீட் தேர்வு குறித்த விளக்கம் அனுப்புகிறது தமிழக அரசு

 

''நீட் தேர்வு தொடர்பாக, ஆயுஷ் அமைச்சகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, விரைவில் விளக்கம் அனுப்பப்படும்,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


இந்த தீர்மானம், ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு விலக்கு தொடர்பாக, சில கேள்விகளை ஆயுஷ் அமைச்சகம், தமிழக அரசிடம் கேட்டுள்ளது.


 இதுகுறித்து, நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், ''நீட் தேர்வு தொடர்பாக ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து, சில விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதற்கான பதிலை அனுப்பும் முயற்சியை, சட்டத்துறை செய்து வருகிறது. சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, இன்னும் ஓரிரு வாரத்திற்குள், ஆயுஷ் அமைச்சகத்திற்கு பதில் அனுப்பப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி