Breaking : TET - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் - 2க்கான தேர்வு தேதி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2023

Breaking : TET - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் - 2க்கான தேர்வு தேதி அறிவிப்பு.

TNTET PAPER II EXAM TENTATIVE DATES


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 -ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது . மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது . அதில் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது . தற்பொழுது ஜனவரி மாதம் 31.01.2023 முதல் பிப்ரவரி மாதம் 12.02.2023 வரை உள்ள தேதிகளில் தாள்- II ற்கு உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



8 comments:

  1. டேய் நான் ஆட்சிக்கு வந்தால் 177 அறிக்கை எங்கே 149 ரத்து எங்கே பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு இன்று தேர்தல் அறிக்கையில் சொன்னபடி 80/எங்கே செய்து இருக்கிறாய்

    ReplyDelete
  2. Paper 2 தமிழ் வினாக்கள் தேவை என்றால் 7868903430 மற்றும் ஆன்லைன் தமிழ் மற்றும் ss பாடம் மாலை நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் 7878903430

    ReplyDelete
  3. 42 வயது வரம்பு - ஆட்சி மாறியும் வேதனையும் சோதனையும் மாறவில்லை படித்துவிட்டு தவிப்பவர்களுக்கு! பி.எட் கல்லூரிகளைத் திறந்துவிட்டு வயது வரம்பை (57 வயது வரை) அதிகப்படுத்தி அனைவரையும் படிக்கச் சொல்லிவிட்டு தற்போது 9 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சிபெற்று விட்டு வேலைக்காக காத்திருக்கும் 42 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பையும் வழங்காமல் தற்போது இப்படி ஒரு பேரிடியை இறக்கினால் எங்கே சென்று அழுவார்கள்? கடந்த அதிமுக ஆட்சியில் ஃப்ரெஷர்ஸ் மட்டுமே பயன்பெறும் வகையில் தேர்வுமுறையை மாற்றி திறமையானவர்களின் மதிப்பெண்களை (யு.ஜி) தன்னாட்சிக்கல்லூரிகளில் படித்த புதியவர்களின் மதிப்பெண்களோடு ஒப்பிட்டு திறமையும் அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் புறக்கணிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போதும் புறக்கணிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? அதிலும் வயது அதிகம் உடையவர்களின் கோரிக்கையையும் திமுக அரசு தான் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிடி. இது போன்ற பேரிடிகளை படித்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். எங்கோ ஒரு மூலையில் குரல் எழுப்பினாலும் செவிகொடுத்துக் கேட்டு அதற்கான தீர்வுகளை தருவார். ஆனால் தற்போதைய ஆட்சி கலைஞர் ஆட்சி போன்று இல்லாமல் உள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் ஒருபுறம் சொற்ப ஊதியத்தில் கதறிக்கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்கள். அவர்களை நியமனம் செய்த அதிமுக ஆட்சி வஞ்சித்துவிட்டது. திமுக ஆட்சியை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நம்பிக்கையுடன் விடியல் கிடைக்கும் என்று.

    ReplyDelete
  4. முந்தைய அதிமுக ஆட்சியும் தற்காலிக ஆசிரியர்களை ஒவ்வொரு வருடமும் நியமனம் செய்து பத்தாண்டுகளை எந்த நியமனமும் செய்யாமல் சென்றுவிட்டது. தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அந்த சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவித்துவிட்டு ஆனால் 42 வயதை நிர்ணயம் செய்து விட்டு சென்று விட்டார்கள். வருடாவருடம் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தாலும் இருக்கும் பணியிடங்களை பதவி உயர்வில் மட்டுமே நிரப்பிவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டு சென்றார்கள் முந்தைய ஆட்சியாளர்கள். இப்போதும் அதே நிலையை கையில் எடுத்து விடியலை எதிர்பார்த்தவர்கள் மத்தியில் பேரிடியை இறக்கியுள்ளார்கள். பி.எட் கல்லூரிகள் வைத்திருக்கும் அதிகம்பேர் அரசியல்வாதிகள் தான். அவர்களுக்கு ஏற்ற வகையில் பி.எட் படிப்பை 57 வயது வரை படிக்கலாம் என்று வயது வரம்பை உயர்த்திவிட்டு தற்போது தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் 42 வயது என வயதை நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் பணிநியமனம் வழங்காமல் இருந்துவிட்டு தற்போது வயது வரம்பை நிர்ணயம் செய்வது நியாயமா? இதில் நியமனத்தேர்வு வேறு. முந்தைய ஆட்சியில் நிதி இல்லை என்று 10 ஆண்டுகளையும் கடத்தினார்கள். ஆனால் அரசியல்வியாதிகள் அனைவரும் எவ்வளவு சொத்து வாங்கி குவித்துள்ளார்கள் என்பது அவர்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் படித்தவர்களுக்கு வேலை போடவேண்டும் என்றால் நிதியில்லை அவர்களிடம். அதே தவறு கலைஞர் ஐயாவின் ஆட்சியிலும் நிகழக்கூடாது. தளபதியாரை நம்பி அவரவர் குடும்பம் மட்டுமல்லாது தெரிந்தவர்களிடம் எல்லாம் ஓட்டுபோடச் சொல்லி வற்புறுத்தினோம். இப்போது எங்களை கேள்வி கேட்கிறார்கள் இந்த ஆட்சியிலும் அதே நிலை தான் என்று. விடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் தளபதியாரே!

    ReplyDelete
  5. Niyamanathervu against case epo hearing

    ReplyDelete
  6. அமுதசுரபி பயிற்சி மையம்
    UG TRB தமிழ்
    தர்மபுரி & கிருஷ்ணகிரி
    Daily class (6-8 pm)
    Saturday & Sunday (9-5pm)
    Contact : 9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி