ITI பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2023

ITI பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

அரசாணை ( நிலை ) எண் .34 , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு ( எஸ் .1 ) துறை நாள் . 30.03.2022 - ன்படி 8 ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC / NAC பெற்றவர்கள் 10 ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10 வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC / NAC பெற்றவர்கள் 11 மற்றும் 12 ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து , அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 விண்ணப்ப படிவம் , முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ( SOP ) ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன . அதனை பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் .

Equivalence Certificate - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி