MISSION DELTA : 4 முதல் 9 - ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் கற்றல் திறனை மேம்படுத்த CEO புதிய திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2023

MISSION DELTA : 4 முதல் 9 - ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் கற்றல் திறனை மேம்படுத்த CEO புதிய திட்டம்.


தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் திட்டம் :

நமது மாவட்டத்தில் 4 - ஆம் வகுப்பு முதல் 9 - ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை இனங்கண்டறிய, சரளமாக வாசிக்க, எழுத தேவையான அடிப்படை மொழி அறிவு, அடிப்படை கணித செயல்பாடுகள் (Basic Arithmetic Operations) ஆகியவற்றில் திறனடைவு பெறாத மாணவர்களை 31.03.2023 -க்குள், உரிய திறனடைவு பெறச் செய்து தகுதிப்படுத்திட “MISSION DELTA” என்ற செயல் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. 


💫அனைத்து பள்ளிகளிலும் மேற்காணும் குறைந்தபட்ச அடைவினை இன்னும் பெறாத மாணவர்களின் பெயர் பட்டியலை வகுப்பு வாரியாக தாயார் செய்து 10.01.2023 க்குள் இணைப்பில் காணும் Google Spread Sheet – இணைப்பில் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றது.


💫மேலும் மாணவர்களின் பெயரை இனங்கண்டறிவது, தொடர்ந்து கண்காணிக்கும் பணிகளை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.


💫இப்பொருள் சார்ந்து மறு நினைவூட்டலுக்கு இடமின்றி செயல்பட அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகின்றது.


முகஅ

தஞ்சாவூர்.

MISSION DELTA Revised Letter - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி