School Morning Prayer Activities - 23.01.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2023

School Morning Prayer Activities - 23.01.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 23.01.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

பொருள்:

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.


பழமொழி :
Without wisdom,wealth is worthless.

விவேகம் இல்லாச் செல்வம் வீணே.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன்.

 2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.


பொன்மொழி :

நமது மேலாதிக்க எண்ணங்களின் விளைவுகளையே நமது வாழ்க்கை எப்போதும் பிரதிபலிக்கின்றது.


பொது அறிவு :

1. பறவை முட்டையில் எத்தனை சவ்வுகள் உள்ளன? 

 ஐந்து சவ்வுகள்

2 . உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது? 

கியூபா.


English words & meanings :

pail - bucket, noun. நீர் எடுக்கும் வாளி. பெயர்ச் சொல். pale - light in colour. adjective. வெளிறிய வண்ணம். பெயரடை


ஆரோக்ய வாழ்வு :

கொப்பரை தேங்காய் உடன் கசகசா அரைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். 2. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து காய்ச்சி நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்


NMMS Q

ஓர் இணைகரத்தின் உயரம் 8 சென்டிமீட்டர் மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தை போல் மூன்று மடங்கு எனில் அதன் பரப்பளவு___________சதுர சென்டிமீ்ட்டர் 

விடை: 192. 

விளக்கம் : b x h= 24 x 8 = 192


ஜனவரி 23 இன்று

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்


நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.[46] அதன்படி இந்தியா,

நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!  


நீதிக்கதை

நல்ல நண்பன் வேண்டும்


ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.

அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.


இன்றைய செய்திகள் - 23.01.2023

* குடியரசு தின விழா பாதுகாப்பு: டெல்லி செல்லும் ரயில்களில் ஜனவரி-26 வரை பார்சல் சேவை நிறுத்தம்.

* வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

* தமிழகத்தில் 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்.

* அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை  இன்று சூட்டுகிறார் பிரதமர் நரேத்திர மோடி.

* சீன எல்லையில் இந்தியா பிரம்மாண்ட போர் பயிற்சி - இந்திய விமானங்கள், ஏவுகணைகள் குவிப்பு.

* முடிவெடுக்க தயங்கும் மேற்குலக நாடுகளால் தங்கள் நாட்டு மக்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

* இந்திய ஓபன் பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீரர் குன்லவுட் மற்றும்  பெண்கள் ஒற்றையர் பிரிவில் கொரியா வீராங்கனை அன் சியாங் ஆகியோர் பட்டம் வென்றனர்.

* ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்.


Today's Headlines

* Republic Day Security: Parcel service suspended on Delhi-bound trains till Jan-26

* The district collector has imposed new restrictions on the conduct of bull slaughtering ceremonies in Vellore district.

* 1.14 lakh people are employed through 71 private employment camps in Tamil Nadu: Minister CV Ganesan informs.

 * Prime Minister Narendra Modi today named Paramveer Chakra awardees for 21 unnamed islands in the Andaman and Nicobar Islands.

 * India's massive war drills on Chinese border - Indian aircraft, missile build-up

 * Ukraine says its people are being killed by the West, which hesitates to make decisions.

*  India Open Badminton: Thailand's Kun Laut and Korea's Anh Xiang won the men's singles title.

 * Hockey World Cup: Spain beat Malaysia to reach quarter-finals
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி