தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை: 20ம் தேதி நடக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2023

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை: 20ம் தேதி நடக்கிறது

 கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வரும் 20ம் தேதி நடக்கிறது. இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 1,400 இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை உடனடி மாணவர் சேர்க்கையின் (ஸ்பாட் அட்மிஷன்) மூலம் வரும் 20ம் தேதி நிரப்ப பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த உடனடி கலந்தாய்வில், பொதுகலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று அதனை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம். தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம். மேலும், மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், காலியிடங்களுக்கான அட்டவணை ஆகியவை பல்கலைக்கழகத்தின் www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூலை 15 முதல் 30ம் தேதிக்குள் வகுப்புகள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி