அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2023

அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு


தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.


நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், ஒப்புதல் செய்யப்பட்ட  அங்கன்வாடி பணியாளர்கள்(Aganwadi Workers) எண்ணிக்கையில்  1,27,891 இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன என்றும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள்(Aganwadi Helpers) பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அங்கன்வாடி சேவைகள்  : 1975ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில்  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர்.


இந்த திட்டத்தின் மைய நாடியாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ். 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940  குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம்  54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 13.9 லட்சமாக உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி