கணக்கு துறையில் உள்ள நேரடி நியமன கணக்கு அலுவலர்கள் நிலையில் உள்ள 23 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2023

கணக்கு துறையில் உள்ள நேரடி நியமன கணக்கு அலுவலர்கள் நிலையில் உள்ள 23 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு

 

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கருவூல கணக்கு துறையில் உள்ள நேரடி நியமன கணக்கு அலுவலர் முன்கொணர்வு காலிபணியிடங்களை விரைவில் நிரப்பும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமன கணக்கு அலுவலர்கள் (வகுப்பு III) நிலையில் உள்ள 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அவற்றில் 17 பணியிடங்கள் முன்கொணர்வு பணியிடங்கள் ஆகும். இந்தப் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி பட்டயக் கணக்கர், விலை மதிப்பீட்டுக் கணக்கர் ஆகும். அவர்களில் 12 பேருக்கு பணி நியமன ஆணை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் இன்று வழங்கப்பட்டது. இவற்றுள், 10 பணியிடங்கள் ( MBC / DC - 02; SC - 07; BC (M) - 01) முன்கொணர்வு பணியிடங்கள் ஆகும்.


பத்து ஆண்டுகளுக்கு மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முன்கொணர்வு காலிப்பணியிடங்களை நிரப்ப உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிதித் துறை, மனிதவள மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த முயற்சியே இதற்கு வழிவகுத்தது. புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள், 6 மாதங்களுக்கு கட்டாய பயிற்சி பெற வேண்டும். மறுசீரமைக்கப்பட்ட பயிற்சித் திட்டமானது அரசாணை (நிலை) எண். 42, நிதி (க.க. - 3) துறை, நாள்:16.02.2023 மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. [23/02, 9:10 pm] jayaprakashrakkiannan: https://strawpoll.com/polls/xVg7jjG3znr
    [23/02, 9:10 pm] jayaprakashrakkiannan: Please vote to M16 A to Z about Airport

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி