இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 6, 2023

இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமின் டாக் சேவா(கிராமிய தபால் ஊழியர்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி: Branch Postmaster (BPM)

சம்பளம்: மாதம் ரூ.12,000 - 29,380


பணி: Assistant Branch Postmaster (ABPM)

பணி: Gramin Dak Sevaks (GDS)

சம்பளம்: மாதம் ரூ.10,000 - 24,470


மொத்த காலியிடங்கள்: 40,889. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும். 


வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிக்கும் முறை: www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.2.2023


மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி