வேளாண் பல்கலையில் 8 புதிய படிப்புகள் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2023

வேளாண் பல்கலையில் 8 புதிய படிப்புகள் அறிமுகம்

 

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நான்கு சான்றிதழ் படிப்புகள், நான்கு டிப்ளமா படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


இது குறித்து, பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சென்னையில் அளித்த பேட்டி:


தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஏற்கனவே காளான் வளர்ப்பு, மூலிகை பயிர்கள் உள்ளிட்ட மொத்தம் 44 வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.


தற்போது, அலங்கார தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத் தோட்டம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


தோட்டக்கலை செடிகள் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், 'ஹைட்ரோபோனிக்ஸ்' முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழி தொழில்நுட்பங்கள், வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட டிப்ளமா படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


இந்த பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வயது வரம்பு இல்லை. சென்னை நகர்ப்புறவாசிகளுக்கு, கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் செயல்படும் தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்கத்தில் பயிற்சி பெறலாம்.


மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மையங்கள் வாயிலாக பயிற்சிகள் வழங்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி