பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தை நவீன முறையில் வடிவமைத்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2023

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தை நவீன முறையில் வடிவமைத்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை.

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் - அமைச்சர் உதயநிதி நாளை (01.03.2023) திறந்து வைக்கிறார்!


தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரும் அரசு என்பதை தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்துவருகிறது. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. அந்தத் திட்டங்களுக்கு உறுதுணை புரியும் வகையில் , கட்டமைப்பு வசதிகளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் புலம் ( Assessment cell ) , முன்னோட்டக் காட்சி அரங்கம் ( Preview theatre ) , 14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம் ஆகியவற்றை நவீன முறையில் வடிவமைத்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. 


இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் , மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் , மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இவற்றைத் திறந்து வைக்க இருக்கிறார்.


நிகழ்வில் பள்ளிக் கல்விக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு . காகர்லா உஷா இ.ஆ.ப உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர் .

1 comment:

  1. அன்பழகன் அவர்கள் கல்வித்துறைக்கு என்ன சாதித்தார் என்று ஒன்னும் புரிய வில்லை கல்வித் துறைக்கு சாதித்தவர் காமராஜர் அவரைப்பற்றி எந்த இடத்திலும் அவர் பெயர் வைக்கப்படவில்லை ஆனால் ஒன்றும் செய்யாது அரசியல் கட்சியில் அமைச்சராக இருந்து திமுகவுக்கு பக்கபலமாக இருந்தவர் என்ற காரணத்திற்காகவே இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என தோன்றுகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி