மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?.. தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்கள் விவரத்தை சேகரிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2023

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?.. தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்கள் விவரத்தை சேகரிக்க உத்தரவு

 

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் ஊழியர்கள் விவரங்களை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு அரசை பொறுத்த வரையில் புதிய ஓய்வூதிய திட்டமானது நடைமுறையில் உள்ளது. ஆனால் பொதுவாகவே அரசு ஊழியர் சங்கங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு யாருக்காவது மாற்றப்பட்டுள்ளதா, எதன் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது, நீதிமன்ற உத்தரவு, அல்லது அரசாணை ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்ற விவரங்களை சேகரிப்பதற்காக அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் 2003-ம் ஆண்டில் இருந்து தற்போதுவரை உள்ள புதிய பென்சன் திட்டத்தில் இருந்து பழைய பென்சன் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனரா? அவ்வாறாக மாற்றப்பட்டிருந்தால் ஏதன் அடிப்படையில் மாற்றப்பட்டனர், யாருடைய உத்தரவின் பேரில் மாற்றப்பட்டனர், எந்தெந்த துறைகளில் எல்லாம் மாற்றப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான முழுமையான விபரங்களை சமர்ப்பிக்க நிதித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பழைய பென்சன் திட்டத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும் நிலையில், தகவல்கள் தற்போது நிதித்துறை செயலாளர் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசை பொறுத்தவரையில் புதிய பென்சன் திட்டத்தில் இருந்து பழைய பென்சன் திட்டதிற்கு மாற்றுவது தொடர்பாக துரிதமான முடிவு இதுவரை எடுக்கப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. தலைப்பை மாற்றுங்கள்

    தயவு செய்து தவறான தலைப்பு கொடுக்காதீர்கள்....

    ReplyDelete
  2. எந்த ஓய்வூதிய திட்டமும் வழங்கப்படவில்லை மாறாக பணத்தை ஓய்வு பெறும் பொழுது திருப்பி அளிக்கிறது எதற்கு புதிய ஓய்வு திட்டம் என்று தவறாக பதிவிடுகிறீர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி