வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் செம அப்டேட்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2023

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் செம அப்டேட்!

வாட்ஸ்ஆப்பில் 30 நொடிகள் வரை வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, போட்டோ, விடியோ அனுப்புவதற்கும் ஆடியோ, விடியோ அழைப்புகளுக்கும் அதிகம் பயன்படுகிறது. 


அந்நிறுவனமும் பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 


இந்நிலையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட்டோ, விடியோ மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  30 நொடிகள் வரையிலான வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கலாம். 


ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் அனைவரும் இந்த புதிய வசதியை பெறலாம். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி