ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2023

ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

ஆவினில் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடான  முறையில் ஆவினில் விதிகளை மீறி வேலை  வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் விளைவாக பல சர்ச்சைகள் ஏற்பட்டது. ஆவினில் காலிபணியிடங்களை நிரப்பும் பணியை முறைப்படுத்தி, கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் டிஎன்பிஎஸ்சி மூலம்  ஆட்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.


இதன்படிஆவினில் தற்போது காலியாக உள்ள 322 பணி இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆவின் பணிக்கான ஆட்சேர்க்கையும் அரசுக்கு சொந்தமான சட்டப்பூர்வமான வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், மேலும் மாநில அரசுக்கு கீழ் உள்ள அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்துதுறையில் ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இதற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்காக முன்பணமாக 97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வு விதிமுறைகள் இப்பணி தேர்வுகளுக்கும் விதிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆவின், போக்குவரத்து மற்றும் அரசுக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி