பள்ளிக்கு தாடியுடன் வந்ததால் அனுமதி மறுப்பு: மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஷேவிங் செய்தனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2023

பள்ளிக்கு தாடியுடன் வந்ததால் அனுமதி மறுப்பு: மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஷேவிங் செய்தனர்

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானத்தை சுற்றி அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் சுப்பிரமணிய சாஸ்திரியர் ஆகிய மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இங்கு, நேற்று நடந்த செய்முறை தேர்வு பயிற்சிக்கு வந்த பிளஸ் 2 மாணவர்கள் சிலர் தலை முடியை  சரியாக வெட்டாமலும், முகத்தில் தாடி ஷேவ் செய்யாமலும் வந்தனர்.


அவர்களை உள்ளே அனுமதிக்காமல் ஆசிரியர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஷேவ் செய்ய பணம் இல்லாததால் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கையில் வைத்திருந்த பணத்திற்கு ஷேவிங் செட் ஒன்று வாங்கி வந்து, ஆரணி எல்எல்ஏ  அலுவலகம்  பின்புறம் சென்ற மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாடியை ஷேவ் செய்து கொண்டு, அவசர அவரமாக பள்ளிக்கு சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி