TNTET - தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2023

TNTET - தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். 


அரசுப் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வு நடத்தும் அரசாணை 149-யை ரத்து செய்ய வேண்டும், 2013, 2014, 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் நியமனம் வழங்கப்படும் எனக் கூறிய வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இதுவரை 12 முறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் எனவே அரசு நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

8 comments:

  1. Replies
    1. Congratulations sir... Nalla manasu

      Delete
    2. தி மு க விற்கு எதற்கு வாக்களித்தோம் என வேதனைபடுகிறோம். இப்படியா பொய் பேசுவார்கள். இனி இந்த நாய்களின் தேர்தல் அறிக்கையை படிக்க கூட கூடாது. பொய் சொல்லி வாக்கு கேட்டு யமாற்றுவார்களா? போராட்டம் வேண்டாம். அடுத்த முறை தற்கொலை செய்து இறந்து விடலாம். எந்த ஜால்ரா கட்சிகளும் நமக்கு ஆதரவாக இல்லை..வரும் பாராளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் முடிவெடுத்து விட்டனர். நாமும் அப்படியே செய்வோம். 2026 கு பின் விடியவே கூடாது..

      Delete
  2. அது போன வருஷம்

    ReplyDelete
  3. வேதனையும் சோதனையும் தான் மிச்சம் சொந்தங்களே..

    ReplyDelete
  4. ஏமாற்றிய ஸ்டாலின் அரசு

    ReplyDelete
  5. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. தற்போது குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய நேரத்தில் கோச்சிங் சென்டர் சென்று கொண்டே இருக்கமுடியுமா? மீண்டும் மீண்டும் தேர்வு வைத்து காலத்தை வீணடிக்காமல் விடியல் தாருங்கள்.... கடந்த ஆட்சிபோல் இல்லாமல்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி