திருப்பதியில் இன்று(மார்ச் 1) முதல் புதிய முறை அமல்.. இனி யாரும் ஏமாத்த முடியாது.. தேவஸ்தானம் அறிவிப்பு..!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2023

திருப்பதியில் இன்று(மார்ச் 1) முதல் புதிய முறை அமல்.. இனி யாரும் ஏமாத்த முடியாது.. தேவஸ்தானம் அறிவிப்பு..!!!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.


இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் லட்டு பிரசாதம் வாங்குவது, தங்குமறைகளை பெறுவது ஆகியவற்றுக்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்துள்ளனர் என்று தெரிந்து கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பத்தை இன்று மார்ச் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்வதற்கு தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி